தீவிர புயலாக வலுவடைந்தது மோக்கா!!
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மோக்கா புயல் தீவிர புயலாக வலுவடைந்தது.
நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மோக்கா புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுவடைந்தது.
நாளை காலை முதல் வடக்கு - வட கிழக்கு திசையில் திரும்பி நகர்ந்து மாலை மிகத்தீவிர புயலாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு 13.05.2023 மாலை வரை காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கும்.
அதாவது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 165 கிலோ மீட்டர் வரை உயர்ந்து, 14ஆம் தேதி காலை தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும்.
இது போர்ட் பிளேருக்கு மேற்கே 520 கிமீ தொலைவிலும், காக்ஸ் பஜாரின் தென்மேற்கில் 1,100 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. கரையை கடக்கும் போது கடுமையான புயலாகவும் காற்றின் வேகம் 150-160 கிலோமீட்டர் முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் கூட வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in