1. Home
  2. தமிழ்நாடு

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு..!!

குஜராத் மாநிலம் மணிநகரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா தமிழ் பள்ளிக்கு, வி.ஜி.பி. உலகத் தமிழ் சங்க தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோஷம் சார்பில், திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக அரசின் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வி.ஜி.சந்தோஷம், மல்லைத் தமிழ் சங்கம் தலைவரும், ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளருமான மல்லை சத்யா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.

இதே போல், குஜராத் மணிநகரில், புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடம் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக குஜராத் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஜெகதீஷ் ஈஸ்வர், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

Trending News

Latest News

You May Like