1. Home
  2. தமிழ்நாடு

திருமண வரவேற்பில் திடீரென உயிரிழந்த மணப்பெண்!!


கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் பதாயிக்கர பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணான பாத்திமா பதூல் என்பவருக்கும், மூர்க்க நாடு எனும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் திருமணத்தின் முந்தைய நாள் மணப்பெண்ணின் வீட்டில் வைத்து இஸ்லாமிய மத முறைப்படி மயிலாஞ்சி கல்யாணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மணப்பெண் பாத்திமா மிக்க மகிழ்ச்சியுடன் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். பதறிப்போன இருவீட்டாரும் மணப்பெண்ணை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


திருமண வரவேற்பில் திடீரென உயிரிழந்த மணப்பெண்!!

அங்கு மருத்துவ சோதனைகள் நடைபெற்று கொண்டிருந்த போதே மயக்கத்திலேயே அப்பெண் உயிரிழந்தார். நெஞ்சு வலி காரணமாக மணப்பெண் உயிரிழந்ததாக பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பெண்ணின் உடல் மலப்புரம் மஞ்சேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வந்ததும் பெண்ணின் இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like