திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பற்றி தான்..!!
கூத்தாண்டவர் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கூவாகம் விழாவுக்கு பொதுவாக அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் யாரும் செல்வதில்லையாம்.
அதை சுட்டிக்காட்டி பேசிய உதயநிதி ஸ்டாலின் 'திருநங்கைகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்தி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி இருக்கிறோம். சட்டமன்றத்தில் முதன் முதலில் நான் பேசியதே திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பற்றிதான். நீங்கள் உங்கள் குறைகளை சொல்ல எனது அலுவலகம் 24 மணி நேரமும் திறந்து இருக்கும்.
வரும் காலங்களில் தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட தி.மு.க. வாய்ப்பளிக்கும். எம்.பி. எம்.எல்.ஏ.க்களாகவும் தேர்வு செய்யப்படுவார்கள்' என்றார். அவரது பேச்சை கேட்டதும் கூவாகத்தில் மகிழ்ச்சி பிரவாகம் கரை புரண்டது. உற்சாக மூடில் இருக்கிறார்கள் திருநங்கைகள்.