1. Home
  2. தமிழ்நாடு

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற உடனே விண்ணப்பீங்க..!!

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது பெற உடனே விண்ணப்பீங்க..!!

தமிழக அரசால் 2022 – 2023 ஆண்டுக்கான திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருதுக்கு, திருநங்கைகளின் முன்னேற்றத்திற்கு சேவை புரிந்த திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். இதற்கு தமிழக அரசின் விருதுகள் இணையதளமான “awards.tn.gov.in”-ல் வரும் பிப்-28-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த விருதினை பெற சில விதிமுறைகளும் கடைபிடிக்கபட்டு வருகிறது. அதாவது, திருநங்கைகள் அரசின் உதவிகள் பெறாமல் தானாக வாழ்ககையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவர்கள் வாழ்வில் முன்னேற உதவியிருக்க வேண்டும், மற்றும் திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது என பல விதிமுறைகள் முன் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அளிக்க வேண்டிய கையேட்டில், சுயவிவர குறிப்பு, 2 புகைப்படங்கள், சுயசரிதை, விருதுகள் பெற்ற விவரம், சேவை பற்றிய செயல்முறை விளக்கம், சேவையை பாராட்டி பத்திரிகையில் வந்த செய்தித் தொகுப்புகள், சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை உள்ளிட்டவை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like