திருச்சியில் டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறி அட்டகாசம்!!
திருச்சி வழியாக ஹவுரா செல்லும் விரைவு ரயிலில் வடமாநில கும்பல் டிக்கெட் எடுக்காமல் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரியில் இருந்து ஹவுராவுக்கு செல்லும் விரைவு ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்துக்கு வந்தது. அப்போது முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் ஏறினர்.
அதுமட்டுமல்லாமல் முன்பதிவு இருக்கையில் அமர்ந்து கொண்டு மற்ற முன்பதிவு செய்த பயணிகளுக்கு கடும் சிரமத்தை கொடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த முன்பதிவு செய்த பயணிகள் வடமாநிலத்தவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரயில் புறப்பட்டதால் பயணிகள் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். அதன்பின் அங்கு ரயில்வே காவலர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதககர்கள் வந்தனர்.
அவர்களிடம் முன்பதிவு செய்த பயணிகள் இதுதொடர்பாக புகார் அளித்தனர். பின்னர் முன்பதிவு செய்யாத வடமாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
இதனால் சுமார் ஒருமணி நேரம் ரயில் தாமதமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது. முன்பதிவு செய்யாதவர்கள் ரயிலில் ஏறி செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ள நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in