1. Home
  2. தமிழ்நாடு

திக்..திக்..நிமிடங்கள்...ஓடும் ரெயிலில் இறங்க முயன்று நடைமேடைக்கு இடையே சிக்கிய பயணி..!

1

இன்டர்சிட்டி ரயில் (வ.என்.12680) தினமும் காலை 6:20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு மதியம் 1:50 மணிக்கு சென்னை வந்தடைகிறது.

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியே செல்லும் இந்த ரயில் கோவை, சென்னை தவிர 11 இடங்களில் நின்று செல்லும். இன்று அவ்வாறு ஈரோடு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தபோது ரயிலின் வேகம் குறைந்து இயக்கப்பட்டது.

இந்த நேரத்தில் ரயிலில் இருந்து ஒரு ஆண் பயணி இயக்கத்தில் இருந்த போதே இறங்கினார். இவ்வாறு கீழே இறங்கியதால் கால் வழுக்கி அவர் விழுந்தார். கதவின் ஓரத்தில் இருந்த கைப்பிடியை பிடித்துக்கொண்ட அவரின் கீழ் பகுதி ரயிலின் கீழ் பகுதிக்குள் செல்ல துவங்கிய நேரத்தில் அங்கிருந்த ரயில்வே போலீஸ் அப்துல் ரஃபிக் விரைந்து வந்து அவரை ஒற்றை கையில் இழுத்து பத்திரமாக மீட்டார்.

துரிதமாக செயல்பட்ட காவலர்  ரஃபிக்கிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மிகப்பெரும் அதிர்ஷ்டவசமாக அந்த பயணி எந்தவித பாதிப்பும் இன்றி தப்பித்தார். ஒருவேளை அங்கு காவலர் ரஃபிக் இல்லையென்றால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

ரயில் பயணிகள் தயவு செய்து இது போல ஓடும் ரயிலில் இருந்து இறங்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 1 நொடியில் என்ன வேண்டுமானால் நடக்கலாம். எனவே பொறுப்புடன் இருக்க வேண்டும் என ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like