தாயை கொடூரமாக கொன்ற ஜிம் மாஸ்டர்!!
66 வயது தாயை கத்தியால் வெட்டி கொடூரமாக கொலை செய்த ஜிம் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே கோட்பந்தர் பகுதியை சேர்ந்த விலாஸ் பட்கர் (71) - வினிதா பட்கர் (66) தம்பதியின் மூத்த மகன் சங்கல்ப் பட்கர் ஜிம் பயிற்சியாளராக உள்ளார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
ஜிம் பயிற்சியை தொடர்ந்து மேற்கொண்டு வந்த இவர், ஸ்டீராய்டு ஊசியை எடுத்துக்கொண்டார். மேலும் போதை பொருட்களையும் எடுத்துக்கொண்டுள்ளார். இதனால் அவர் முழுமையாக போதைக்கு அடிமையாகி மன நலம் பாதிக்கப்பட்டவராக இருந்துள்ளார்.
திருமணமாகியும் மனைவியுடன் பேசாமல் தனியாகவே இருந்து வந்துள்ளார். அதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பெற்றோருக்கும், மகனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த மகன், தனது 66 வயது தாயை சரமாரியாக தாக்கி கொன்றுள்ளார். பின்னர் தந்தையையும் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த தந்தை மயக்க நிலையில் இருந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து தப்பி சென்ற சங்கல்பை அவரது மாமா வீட்டின் அருகே போலீஸார் கைது செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in