தாத்தாவுக்கு திதி கொடுக்க சென்ற இடத்தில் நடந்த சோகம்..!!
கோவையை சேர்ந்தவர் ராஜேஷ் கரீம்(32). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், கரூர் செல்லாண்டிபாளையத்தில் உள்ள இவரது தாத்தா செல்வராஜ்(80), கடந்த சில நாட்களுக்கு முன் இறந்துவிட்டார். இதனை தொடர்ந்து, நேற்று அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கரூர் செல்லாண்டிபாளையம் வந்திருந்த ராஜேஷ் கரீம், உறவினர்களுடன் நெரூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்று குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்தனர்.
அதன் பேரில், அந்ந பகுதி இளைஞர்கள் ஆற்றில் இறங்கி தேடினர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் தீயணைப்புத்துறையினர் காவிரி ஆற்றில் இறங்கி தேடினர். சுமார் 1 மணி நேர தேடலுக்கு பின்னர் சுரேஷ் கரீம் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, வாங்கல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.