1. Home
  2. தமிழ்நாடு

தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்.. காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பு பேட்டி..!

தலைவர் பதவிக்கு போட்டியிடுவது ஏன்.. காங்கிரஸ் எம்பி சசிதரூர் பரபரப்பு பேட்டி..!

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 17-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்பி சசிதரூரும் போட்டியிடுகிறார். இன்று அவர் இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் அவர், காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவது ஏன் என்பது பற்றி நிருபர்களிடம் கூறியதாவது: "காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 3 முக்கிய காரணங்கள் உள்ளன. முதலாவது ஜனநாயக போட்டியே கட்சியை பலப்படுத்தும். இதனை கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் பலமுறை கூறியுள்ளனர்.


இரண்டாவதாக காங்கிரஸ் கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளில் இருந்து கட்சியை பலப்படுத்தவும், சீர்ப்படுத்தவும், தொண்டர்களுக்கு உற்சாகம் அளிக்கவும் இந்த தேர்தலில் போட்டியிடும் முடிவை எடுத்தேன். மூன்றாவதாக, தலைமை பொறுப்புக்கு போட்டியிட வேண்டும் என்ற முடிவை எடுத்த பின்பு அதில் உறுதியாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.


எனவே தான் இப்போட்டியில் பங்கேற்பதில் நான் உறுதியாக உள்ளேன். திருவனந்தபுரம் பாராளுமன்ற தேர்தலில் மும்முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான், ஐநா சபை உள்ளிட்ட பெரும் அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளேன்" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like