தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு முக்கிய உத்தரவு..!!
இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில், இன்று ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1,590 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 22-ம் தேதி பிரதமர் மோடி அதிகரிகளுடன் உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை, ஒப்பிட்டு அளவில் திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்களுக்கு சுவாச பிரச்சனை பாதிப்பு அதிகம் உள்ளது.
அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை மேற்கொள்ள மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கொரோனா வழிகாட்டுதல்களை மக்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.