1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாடு முதல்வர் உருவத்தில் பிரம்மாண்ட கேக்!! திருச்சி பேக்கிரி அசத்தல்!

தமிழ்நாடு முதல்வர் உருவத்தில் பிரம்மாண்ட கேக்!! திருச்சி பேக்கிரி அசத்தல்!

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ராஜேஸ்வரி பேக்கரி செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான முறையில் கேக் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் முழு உருவ சிலையை கேக்கில் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தனர்.


தமிழ்நாடு முதல்வர் உருவத்தில் பிரம்மாண்ட கேக்!! திருச்சி பேக்கிரி அசத்தல்!

அதற்கான மூலப் பொருட்களுடன் முதல்வர் ஸ்டாலின் உருவத்தில் 6 அடி உயரம், 92 கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட கேக்கை தயாரித்துள்ளனர். இந்த கேக்கை 24 மணி நேரத்தில் 90 கிலோ சர்க்கரை, 80 முட்டை கலந்த கலவையைக் கொண்டு 4 பேர் குழுவாகச் சேர்ந்து தயாரித்துள்ளனர். இது அப்படியே அச்சு அசலாக ஸ்டாலின் உருவச்சிலை போலவே அமைந்திருப்பதை கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்வதாகவும், அவரை உற்சாகப்படுத்தும் விதமாகவும் அவரின் உருவ வடிவிலான இந்த கேக் தயாரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இந்த கேக் இரண்டு நாள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் தமிழ்நாடு முதல்வர் உருவத்தில் உள்ள கேக்குடன் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சியுடன் செல்கின்றனர்.





Trending News

Latest News

You May Like