1. Home
  2. தமிழ்நாடு

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்!!

தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்!!

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் காலமானார். அவருக்கு வயது 85.

அவ்வை நடராஜன் 1936ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு எனும் ஊரில் ஒளவை துரைசாமி, லோகாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார்.


தமிழறிஞர் அவ்வை நடராஜன் காலமானார்!!

மதுரையிலுள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சாவூரிலுள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

டெல்லியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் ஔவை நடராசன் பணியாற்றியுள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்ததால், மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக அவர் சென்னையில் காலமானார்.

newstm.in

Trending News

Latest News

You May Like