1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராய வழக்கில் தொடர்புடையவர் உடன் புகைப்படம்: அமைச்சர் சொல்வதென்ன..!!


திருநெல்வேலியில் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் 293 பயனாளிகளுக்கு ரூ.22.3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநில சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தமிழகத்தில் கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பான கேள்விக்கு, “எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுகொண்டுதான் இருக்கிறது. சமூக விரோதிகள் தங்கள் இருக்கும் இடத்தை மாற்றிக் கொள்வார்களே தவிர, தொழிலை மாற்ற மாட்டார்கள். சமூக விரோதிகள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எந்தப் பாகுபாடும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்கட்சியினர் விமர்சனம் செய்து கொண்டுதான் இருப்பார்கள். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். தூத்துக்குடியில் 10 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காலத்தில், அப்போதைய முதல்வர் தூத்துக்குடிக்கு உடனே சென்று பார்க்கவில்லை. ஆனால், தற்போது முதல்வர் உடனே நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நடவடிக்கையில் எவ்வித பாகுபாடும் பார்க்கப்படாது முதல்வர் கூறிவிட்டுள்ளார்” என்றார்.

விஷச் சாராய வழக்கில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நபருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட படத்தை வைத்து விமர்சனம் செய்யப்படுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், ”திருமண நாள், பிறந்தநாள் போன்றவற்றுக்கு வாழ்த்து பெற வருகிறார்கள். பொது வாழ்வில் நாங்கள் இருக்கிறோம். எங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள்” என்று பதில் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like