தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பள்ளி குழந்தைகள்..!!
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவமனைக் கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.
இதன்படி, திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல், நகராட்சி நிர்வாகத்துறை மூலம் தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவோராக மாற்ற தனியாருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு அடிக்கல் நாட்டு விழா ஆகிய பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் மேடைக்கு வந்த போது, நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் எழுந்து நின்று முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.