1. Home
  2. தமிழ்நாடு

தந்தை, மகனை பாராட்டிய மோடி!!

தந்தை, மகனை பாராட்டிய மோடி!!

நோட்டு புத்தகங்களை மறுசுழற்சி முறையில் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த மூத்த இதய நோய் வல்லுநர் டாக்டர் தீபக் கிருஷ்ணமூர்த்தியும் அவரது மகனும் மறுசுழற்சி மற்றும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், இதேபோன்ற முயற்சிகள் பற்றி அனைவரும் பகிரவேண்டும், அப்படி செய்தால் மறுசுழற்சி மற்றும் வீணாகும் கழிவுகளை பயனுள்ளவையாக மாற்றுவது பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.


தந்தை, மகனை பாராட்டிய மோடி!!


ஒவ்வொரு கல்வியாண்டு முடிவிலும், தனது மகன் தன் நோட்புக்கில் உள்ள வெற்றுத் தாள்களை கிழித்து எடுக்கிறான். நான் அவற்றைத் தைத்துக் கொடுக்கிறேன். ரஃப் நோட்டாகவும் பயிற்சி நோட்டாகவும் அது பயன்படுகிறது" என்று மருத்துவர் தீபக் கிருஷ்ணமூர்த்தி தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.


மருத்துவரின் இந்த ட்வீட்டுக்கு ரீட்வீட் செய்த பிரதமர் மோடி, "இது ஒரு நல்ல குழு முயற்சி. உங்கள் மகனுக்கும் உங்களுக்கும் பாராட்டுகள்" எனக் கூறியுள்ளார். மேலும் இதேபோன்ற முயற்சிகளைப் பகிர்ந்துகொள்ள மற்றவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மறுசுழற்சி முறை பற்றியும் கழிவுகளை பயன்படுத்தி பயனுள்ளவற்றைத் தயாரிப்பது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like