1. Home
  2. தமிழ்நாடு

தகாத உறவால் கொடூரம்.. இளம்பெண் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை..!

தகாத உறவால் கொடூரம்.. இளம்பெண் முன்பு வாலிபர் வெட்டிக்கொலை..!

சென்னை புழல் லட்சுமிபுரம் அசோகர் தெருவைச் சேர்ந்தவர் சுதா சந்தர் (22). இவர் கண்ணாடிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு சுதா சந்தர் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண்ணுடன் ரெட்டைஏரி கல்பாளையம் அருகே வந்துள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், சுதா சந்தரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனே புழல் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.


சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுதா சந்தர் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இக்கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, சுதா சந்தருடன் வந்த ராகினி என்ற அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவால் நடந்த கொலை எனத் தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுதா சந்தர் ஆவடியில் வசித்தபோது ராகினி (25) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது தகாத உறவாக மாறியுள்ளது. ராகினிக்கு ஏற்கெனவே திருமணமாகி வசந்த் (29) என்ற கணவரும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளது. இந்நிலையில், ராகினியின் தகாத உறவு அவரது கணவர் வசந்த், அவரது அண்ணன்களான உதயா (28), பரத் என்ற ராபின் (25) ஆகியோருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் ராகினி மற்றும் சுதா சந்தரை கண்டித்துள்ளனர்.

இதன் காரணமாக கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று மாதங்களாக கணவரை பிரிந்து அண்ணன் வீட்டில் ராகினி வசித்து வந்துள்ளார். இதற்கிடையே ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி சுதா சந்தருடன் ரெட்டை ஏரி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ராகினி ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சுதா சந்தரை கொலை செய்ய ராகினி கணவர் மற்றும் அவரது அண்ணன்கள் முடிவு செய்தனர். நேற்று இரவு ராகினியுடன் வந்த சுதா சந்தரை அந்த கும்பல் கள்ளிப்பாளையம் அருகே கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளிகள் வந்த ஆட்டோ எண்ணை வைத்து ஒரகடம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் கார்த்திக்(28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் தலைமறைவாகியுள்ள ராகினியின் கணவர் வசந்த், அண்ணன்கள் உதயா, பரத் ஆகிய மூன்று பேரை தேடிவருகிறோம்’ என்றனர்.

Trending News

Latest News

You May Like