1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டர் பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

ட்விட்டர் பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வந்தார். தொடர்ந்து கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து, எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவரானார். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக இணைந்து கட்சியை வழிநடத்தி வந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக எழுந்தது. அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் பொதுக்குழுவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியே தேர்வு செய்யப்பட்டார்.


ட்விட்டர் பயோவை மாற்றிய எடப்பாடி பழனிசாமி..!!

இதனைத்தொடர்ந்து கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிட்டார். அவர் போடியின்றி தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து தேர்தலுக்கு தடை கோரி ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ததோடு தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது.

அதன்படி, அதிமுக தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தனர். பொதுச்செயலாளாராக தேர்வான எடப்பாடி பழனிசாமி, முதலில் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பயோவில் ‘அதிமுக பொதுச் செயலாளர்’ என மாற்றியுள்ளார்.

Trending News

Latest News

You May Like