ட்விட்டரில் புதிய வசதி..! வருகிறது வீடியோ கால், ஆடியோ கால் வசதி..!
எலான் மஸ்க் கடந்தாண்டு ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கினார். அதன்பின் அவர் ட்விட்டரில் தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ட்விட்டரில் செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் ட்விட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தொடக்கத்தில் இவரது நடவடிக்கைகள் தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. எனினும் தொடர்ந்து, பணியாளர்களை சுறுசுறுப்பாக வைத்திருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை அவர் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது, ட்விட்டரில் பதிவிடும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் மூலம் பயனர்கள் பணம் சம்பாதிக்க முடியும் என்று எலான் மஸ்க் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, அதிக உரையுடன் நீண்ட வீடியோக்கள், போஸ்டுகளை பதிவிடலாம் மற்றும் அவற்றை உங்களை பின்தொடருபவர்கள் பார்ப்பதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். இதனை பெறுவதற்கு செட்டிங்ஸில் உள்ள மானிடைஸ் (monetize) என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் என்று எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.