1. Home
  2. தமிழ்நாடு

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தமிழ்நாடு!!

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தமிழ்நாடு!!

தமிழ்நாடு என்று கூறுவதைவிட தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று ஆளுநர் ரவி பேசியதை அடுத்து, ட்விட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ்நாடு குறித்த ஆளுநரின் கருத்து நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் ஏற்பாடுகளை செய்தோரைக் கெளரவிக்கும் நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர், தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும் தெரிவித்தார்.


ட்விட்டரில் ட்ரெண்டாகும் #தமிழ்நாடு!!


தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த 25 ஆண்டுகளில், இந்த உலகத்தை வழி நடத்தும் பொறுப்பில் இந்தியா இருக்கும் எனவும் ஆளுநர் ரவி நம்பிக்கை தெரிவித்தார்.

தலைவர்கள் பலர் போராடி பெற்ற தமிழ்நாடு என்ற பெயரை, வரலாற்று சிறப்பு மிக்க பெயர் குறித்து ஆளுநர் பேசி இருப்பது பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது. ட்விட்டரில் பலரும் தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர்.



newstm.in

Trending News

Latest News

You May Like