1. Home
  2. தமிழ்நாடு

டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!

டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!

கனடா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலம் மேகா தாக்குர் (21), ஒரு வயதில் அவரது பெற்றோருடன் கனடாவில் குடிபெயர்ந்தார். கல்லூரி காலங்களில் டிக்டாக்கில் அறிமுகமான இவர் 9,30,000க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்களைக் வைத்திருந்தார்.

அதன்பிறகு இன்ஸ்டாகிராமிலும் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு வந்தார். பலரும் அவரது வீடியோவை பகிர்ந்து வரும் நிலையில், அவரது பெற்றோர் அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் பகிர்ந்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எங்கள் ஒளிமையான வாழ்க்கையில் எங்களை அன்பாக அக்கறையாக கவனித்து வந்தார் எங்கள் அழகிய மகள் மேகா தாக்கூர்.


டிக்டாக் பிரபலம் திடீர் மரணம்… கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்!!


அவர் நவம்பர் 24ஆம் தேதியன்று அதிகாலை எதிர்பாராத விதமாக உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளனர். மேகாவின் ரசிகர்கள் பலரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ந்து போயுள்ளனர்.

எதிர்பாராத விதமாக என்றால், கார் விபத்தா இல்லை வேறு ஏதானும் காரணத்தால் உயிரிழப்பு நிழந்ததா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இளம் டிக்டாக் பிரபலம் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Trending News

Latest News

You May Like