1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் பாரில் மது அருந்திய மற்றொருவரும் பலி!!


தஞ்சையில் டாஸ்மாக் பாரில் பிளாக்கில் மதுவாங்கிக் குடித்த மற்றொருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கீழவாசல் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையின் பாரில், மீன் மார்க்கெட்டில் பணியாற்றி வந்த குப்புசாமி (60) என்பவரும், விவேக் (35) என்பவரும் இன்று காலை 11.30 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பாக பிளாக்கில் வாங்கி மதுபானம் குடித்துள்ளனர்.

இதில் குப்புசாமி மது அருந்தியபிறகு வாயில் நுரைதள்ளி மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அவருடன் பிளாக்கில் மது வாங்கி குடித்த விவேக் என்பவரும் மார்க்கெட்டில் மயங்கி விழுந்தார்.


டாஸ்மாக் பாரில் மது அருந்திய மற்றொருவரும் பலி!!

அவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில் அவரும் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விவகாரம் குறித்து போலீஸார் நேரில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அதேபோல், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் டாஸ்மாக் கசையில் நேரில் ஆய்வு செய்தார்.

பொதுவாக காலை முதலே இந்த மதுபான பாரில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுகிறது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அதில் ஏராளமானோர் மது வாங்கி அருந்தியதாகவும் கூறப்படுகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like