1. Home
  2. தமிழ்நாடு

டாக்டர் கிட்னியை எடுத்து எனக்கு பொருத்துங்க: பாதிக்கப்பட்ட பெண் கதறல்..!

டாக்டர் கிட்னியை எடுத்து எனக்கு பொருத்துங்க: பாதிக்கப்பட்ட பெண் கதறல்..!

எனது கிட்னிகளை திருடிய மருத்துவரை உடனடியாக கைது செய்து, மாற்று அறுவை சிகிச்சைக்காக அவருடைய கிட்னி எடுத்து எனக்கு பொருத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரைச் சேர்ந்தவர் சுனிதா தேவி (38). இவருக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்படுள்ளது. இதையடுத்து, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு இவரை பரிசோதித்த டாக்டர், அவருக்கு கர்ப்பப்பை கோளாறு இருப்பதாகவும், உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.


இதனால் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அனாலும், அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்து காணப்பட்டதால், வேறொரு மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது, இரண்டு கிட்னிகளும் இல்லாதது தெரியவந்தது.

இதனிடையே, கிட்னி திருடப்பட்ட விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் சுனிதா புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் பெரிதானதையடுத்து, அந்த டாக்டரும் தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து டாக்டரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


கிட்னிகள் திருடப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் சுனிதா பாட்னாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தில்அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சுனிதாவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், அவருக்கு விரைவில் கிட்னி கிடைக்க ஐ.ஜி.ஐ.எம்.எஸ்-சில் பதிவு செய்துள்ளதாகவும், கிடைத்தவுடன் விரைவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சுனிதா கூறுகையில், "நான், வயிறு வலி என்று தான் மருத்துவமனைக்கு சென்றேன். ஆனால் மருத்துவரோ எனது கர்ப்பப்பையில் பிரச்சனை இருப்பதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்து 2 கிட்னிகளை திருடி விட்டார். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்காக நான் உயிரோடு நலமாக இருக்க வேண்டும்.

டாக்டர் கிட்னியை எடுத்து எனக்கு பொருத்துங்க: பாதிக்கப்பட்ட பெண் கதறல்..!

எனது கிட்னிகளை திருடிய மருத்துவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். மாற்று அறுவை சிகிச்சைக்காக அவருடைய கிட்னி எடுத்து எனக்கு பொருத்த வேண்டும். இது போல் ஏழை மக்களின் வாழ்வில் பிரச்சனை செய்யும் மருத்துவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like