1. Home
  2. தமிழ்நாடு

சோபாவில் அமர்ந்து மார்பைத் தொட்டார்...தொழில் அதிபர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்..!!

சோபாவில் அமர்ந்து மார்பைத் தொட்டார்...தொழில் அதிபர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்..!!

தொழில் அதிபர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்தாக ஷெர்லின் சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா (சுனில் லோதா) தனக்கு எதிராக மிகவும் மோசமாக நடந்து கொண்டதாக அவர் கூறி உள்ளார்.

இதுகுறித்து ஷெர்லின் சோப்ரா கூறியதாவது;- ஏப்ரல் மதியம் 12 மணிக்கு மும்பை தொழிலதிபர் ஒருவர் துபாயிலிருந்து உங்களுக்காக வந்திருப்பதாகவும், ஒரு ஓட்டலில் சந்திக்கலாம் என கூறினார்.

மாலையில் மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஹிப் ஹாப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட இருந்தது. அதன் பிறகு,எனது மேலாளருடன் மும்பையில் உள்ள ஓட்டலுக்கு வந்தேன். அங்கு தொழிலதிபர் சுனில் பரஸ்மானி லோதா என ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஒரு வீடியோ ஆல்பம் பாடல் செய்ய வேண்டும் என கூறினார். அதற்கு சம்மதித்தேன்.


சோபாவில் அமர்ந்து மார்பைத் தொட்டார்...தொழில் அதிபர் மீது கவர்ச்சி நடிகை பாலியல் புகார்..!!

இதன் பின்னர் உரையாடல் தொடர்ந்தது. நான் வீட்டிற்கு கிளம்புவதாக கூறும்போது, அவரிடம் வண்டி இல்லாததால் முடிந்தால் அவரை அவரது இடத்தில் இறக்கிவிடுமாறு கூறினார். நான் வீட்டிற்கு வந்தவுடன் தொழிலதிபர் உங்கள் வீட்டைப் பார்க்க முடியுமா? என்று கேட்டார். அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். சிறிது நேரம் பேசினார்.

அவர் ஏற்கனவே மது அருந்தியிருந்தார். அவர் சோபாவில் அமர்ந்து மார்பைத் தொட்டார். நீங்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றார். நான் உடனே அதிர்ச்சியடைந்தேன். நான் சொன்னேன் கவர்ச்சியாக இருக்கிறேன் ஆனால் பொது சொத்து அல்ல என கூறினேன் உன்னை பார்த்தா என்னால கட்டுப்படுத்த முடியல, நீ ரொம்ப கவர்ச்சியாக இருக்கிறாய் என மீண்டும் கூறினார். எனக்கு இதெல்லாம் பிடிக்காது, நீங்க உடனே கிளம்புங்க என கூறியவுடன் பின்னர் மன்னிப்பு கேட்டு அங்கிருந்து கிளம்பத் தயாரானார்.

நான் எனது அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர் மொபைலுக்கு சார்ஜ் போடவேண்டுமென கூறி மீண்டும் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கினார். நான் எதிர்த்ததால் என் உயிருக்கு கூட மிரட்டல் விடுத்தார் என கூறினார்.

தற்போது, ஷெர்லின் சோப்ராவின் புகாரின் அடிப்படையில், சுனில் பரஸ்மானி லோதா மீது 3 பிரிவுகளீன் கீழ் ஜூஹூ காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Trending News

Latest News

You May Like