சென்னையில் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் தொடர்புகொள்ள அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையின் தற்போதைய மழை நிலவரம், நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், மழை அதிகமுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் , தாம்பரம் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை இடர்பாடுகள் குறித்த புகார்களுக்கு அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது கட்டணமில்லா தொடர்பு எண்கள் 1800 425 4355, 1800 425 1600 ஆகிய எண்களை அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. +91 84383 53355 என்ற எண்ணில் வாட்ஸ்-ஆப் மூலமும் புகாரளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மழை தொடர்பான எந்த ஒரு புகாரையும் 1077 என்ற கட்டுப்பாட்டு அறை எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கடலூர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே போல் நாகையில் பேரிடர் பாதிப்பு குறித்த புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு
1077,
04365 251992,
8438669800 (வாட்ஸ்ஆப்)
9487550811 (செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கான எண்) ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம்
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 மற்றும் இலவச உதவி எண் 1913, வாட்ஸ் அப் எண் 9445477205 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும்
சென்னையில் மழை தொடர்பான புகார்களுக்கு உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி. சமூக வலைதளங்களில் புகார் தெரிவிக்கும்போது #ChennaiCorporation அல்லது #ChennaiRains ஹாஷ்டாகை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் கட்டுபாட்டு அறை தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
04368-228801 04368-227704 என்ற எண்களுக்கு தொடர்பு கொண்டு கனமழை தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என, அம்மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது!