சென்னையில் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து!!
ராயப்பேட்டையில் உள்ள கட்டடம் ஒன்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
ரங்கையா கார்டன் பகுதியில் 'ரியல் டவர்' என்ற அடுக்குமாடி குடியிருப்பு வணிக வளாகம்போல் செயல்பட்டு வருகிறது. இதில் ஐடி நிறுவனங்கள், கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கட்டடத்தின் மாடியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் திடீரென கட்டடத்திற்கு மேல் மொட்டை மாடிபகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. மாடியில் வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டடத்திலிருந்த பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அண்மையில் அண்ணா சாலையில் உள்ள எல்ஐசி கட்டடத்தின் மொட்டை மாடியிலும் தீ விபத்து ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே போல் ராயப்பேட்டை பகுதியில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
newstm.in