1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் அப்டேட்… வாட்ஸ் அப்பில் ஓட்டு போடும் வசதி!!

சூப்பர் அப்டேட்… வாட்ஸ் அப்பில் ஓட்டு போடும் வசதி!!

வாட்ஸ் அப்பை உலகம் முழுவதும் பில்லியன் கணக்கிலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனால் அதில் அப்டேட் வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட ஃபேஸ்புக் பக்கத்தைப் போல கவர் போட்டோ வைக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த வசதி வாட்ஸ்-அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்போருக்கு அறிமுகப்படுத்தும் என என்ற தகவலும் வெளியானது. இப்படி நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்டுகளை வெளியிட்டு வரும் வாட்ஸ் அப் தற்போது புதிதாக Poll வசதியை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வசதியை பயன்படுத்தி நமது தனிப்பட்ட கருத்திற்கு மற்றவர்களின் கருத்துகளை கேட்டறிய முடியும். கருத்து கணிப்பு போன்றவற்றிக்கு பயன்படும் இந்த poll ஆப்ஷனை பயன்படுத்தி மற்றவர்கள் ஓட்டு போடுவது மூலமாக தங்களது முடிவை வெளிப்படுத்தலாம்.


சூப்பர் அப்டேட்… வாட்ஸ் அப்பில் ஓட்டு போடும் வசதி!!

இந்த வசதியின் மூலம் தனி நபர் மற்றும் குரூப்பிலும் இருக்கும் நபர்கள் வாக்களிக்க முடியும். யார் எதற்கு வாக்கு அளித்தார்கள் என்பது மற்றவர்களுக்கு வெளிப்படையாக தெரியும் வகையில் இருக்கிறது.

வாட்ஸ் அப்பில் சாட்டிங் ஆப்ஷனில் இருக்கும் Attach buttonஐ க்ளிக் செய்வதன் Poll ஆப்ஷன்களை நீங்கள் உருவாக்கலாம். உங்கள் மொபைலில் இந்த அப்டேட் கிடைக்கவில்லை என்றால் கூகுள் ப்ளே ஸ்டோரில் அப்டேட் செய்து இந்த வசதியை பெற முடியும்.

newstm.in

Trending News

Latest News

You May Like