1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர்! பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன்!!

சூப்பர்! பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன்!!

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவுடன் கோழி இறைச்சி வழங்க மேற்கு வங்க அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்கத்தில் தற்போது மதிய உணவுடன் தானிய வகைகள், காய்கறிகள், முட்டை போன்றவை வழங்கப்படுகிறது. இந்த உணவுகளுடன் சிக்கன் மற்றும் பருவகால பழங்கள் அடுத்த நான்கு மாதங்களுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியை மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது. இந்த கூடுதல் ஊட்டச்சத்து உணவுகள் மாணவர்களுக்கு போஷன் அபியான் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது.


சூப்பர்! பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன்!!

இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் வாரத்திற்கு ரூ.20 செலவாகும். அடுத்த 6 வாரங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்குவது தொடரும் என்பதால், இதன்மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1.6 கோடி மாணவர்கள் பயனடைவார்கள்.

இந்த திட்டத்திற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் 40 : 60 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ள உள்ளன. இந்த திட்டத்திற்கு கூடுதலாக ரூ.371 கோடியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like