1. Home
  2. தமிழ்நாடு

சுதந்திர தின உரையில் என்னென்ன விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?நாட்டு மக்களிடம் கருத்து கேட்கும் பிரதமர் மோடி..!

1

டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற உள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான உரையில் இடம் பெறவேண்டிய அம்சங்கள் குறித்து மக்கள் தங்கள் கருத்துகளை பகிர பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில், ''இந்த ஆண்டு சுதந்திர தின விழா நெருங்குவதையொட்டி நான் இந்திய மக்களிடம் இருந்து யோசனைகளை கேட்க ஆவலுடன் இருக்கிறேன். இந்த ஆண்டு சுதந்திர தின உரையில் என்னென்ன கருப்பொருள்கள் அல்லது விஷயங்கள் இடம்பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய எண்ணங்களை 'நமோ' செயலி, எனது அரசு 'மைஜிஓவி' தளங்களில் பகிருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like