சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி..!! சிறப்பு காட்சிகள் இல்லை..!!
வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் 'பத்து தல' படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியாகி உள்ளது. காலை 8 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிலம்பரசன் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஏஜிஆர் என்ற மாஸான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்ஊ டிரெய்லரில் சிம்புவின் வசனங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்துள்ளது.கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது.
பத்து தல படத்துடன் சூரி நடித்துள்ள விடுதலை, நானி நடிப்பில் தசரா படங்களும் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.