சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றம்..!
நாட்டின் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் 74-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடியை வெள்ளி தாம்பாலத்தில் வைத்து சித்சபையில் வீற்றுள்ள ஸ்ரீ சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீநடராஜ பெருமான் பாதத்தில் சமர்பித்து சிறப்பு அர்ச்சனை, ஆராதனை செய்யப்பட்டது.
பின்னர், பொது தீட்சிதர்களின் செயலாளர் சி.எஸ்.எஸ்.ஹேமசபேச தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் தேசியக் கொடியை வைத்து மேள தாளங்களுடன் கொண்டு வரப்பட்டு, 152 அடி உயர கிழக்கு கோபுரத்தின் உச்சியில் தேசிய கொடி ஏற்றி வைத்து பக்தர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.