1. Home
  2. தமிழ்நாடு

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!!

சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!!

பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கியது.

பீகார் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 12.70 கோடி. அம்மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்களில் சுமார் 2.58 கோடி குடும்பங்கள் உள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு பணிகளை மே மாத இறுதிக்குள் முடிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

இரு கட்டங்களாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பு பணிகளுக்காக சுமார் ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், MGNREGA பணியாளர்கள் என பலருக்கும் கடந்த மாதம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.


சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் தொடக்கம்!!

இந்த கணக்கெடுப்பில் தனிநபரின் வசிப்பிடம், சாதி அதன் உட்பிரிவு, மதம், வருமானம் உள்ளிட்ட தகவல்கள் திரட்டப்படவுள்ளது. திரட்டப்பட்ட தகவல்கள் அனைத்தையும் இணையத்திலும் மொபைல் செயலியில் வெளியிடவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்த நிலையில் ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் நிதீஷ் குமார் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்தாண்டு உத்தரவு பிறப்பித்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டிலும் இதுபோன்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இருவரும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like