சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் குத்திக்கொலை!!
சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை அவரது மாமா கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டம் பஜ்நகர் கிராமத்தைச் சேர்ந்த புடான் சிங் தோமன் என்பவரின் 20 வயது மகள் அதே கிராமத்தைச் சேர்ந்த ரூப் சந்திர மவுரியா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.
அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த பெண் காதலித்து வந்துள்ளார். இதையடுத்து இருவரும் கிராமத்தை விட்டு வெளியேறிக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இதனால் புடான் சிங் தோமன் குடும்பத்தினர் மகள் மீது கடும் கோபத்தில் இருந்தனர். இந்நிலையில், இருவரும் மீண்டும் கிராமத்திற்குத் திரும்பி வந்தனர். இதையடுத்து வேறு சமூகத்தைச் சேர்ந்த நபரைத் திருமணம் செய்து கொண்டதால் பெண்ணை கொலை செய்ய அவரது மாமா திட்டமிட்டார்.
பெண்ணின் வீட்டிற்குச் சென்று அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலைக்கு அவரது மகனும் உடந்தையாக இருந்துள்ளார். இதையடுத்து ரூப் சந்திராவின் குடும்பத்தினர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை அடுத்து இளம் பெண்ணை கொலை செய்த மாமா மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in