1. Home
  2. தமிழ்நாடு

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

ராகுல் காந்தி தற்போது தெலங்கானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நேற்று அவர் ஐதராபாத்தில் தனது ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார்.

அந்த பயணத்தில் ம.தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆதரவையும், தனது தந்தை வைகோ சார்பில் வாழ்த்துகளையும் தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரும் இந்த நடைபயணத்தில் கலந்துகொண்டனர்.


சாட்டையால் அடித்தக்கொண்ட ராகுல் காந்தி!!

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ருத்ராராமில் இருந்து ராகுல் காந்தி இன்று 57ஆவது நாளாக பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா மாநிலங்களின் பழங்குடியின கலைஞர்கள் பாரம்பரியமிக்க 'திம்சா' நடனமாடி ராகுலுக்கு வரவேற்பு அளித்தனர்.


அப்போது கலைஞர்களுடன் சேர்ந்து ராகுல் காந்தியும், உற்சாகமாக நடனமாடினார். அதன்பின்னர் தெலங்கானாவில் பொனாலு பண்டிகையில் பங்கேற்று கொண்ட ராகுல்காந்தி தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டார்.

ராகுல் காந்தி சாட்டையால் அடிக்கும்போது தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.


newstm.in

Trending News

Latest News

You May Like