சர்ச்சையில் சிக்கியுள்ள இயக்குநர் செல்வராகவன்!!
11 ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன் - தனுஷ் கூட்டணியில் 'நானே வருவேன்' திரைப்படம் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்று வருகிறது. சைக்கோ த்ரில்லராக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த செல்வராகவன், தமிழ்நாட்டில் தனக்கு படம் பண்ண பிடிக்கவில்லை என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கில் கூட மாற்று சினிமா எடுக்கிறார்கள், ஆனால் தெற்கில் மட்டும் எதுவும் மாறவில்லை, நானும் 13 வருஷமா பார்க்கிறேன். அப்புறம் என்னத்துக்கு இங்கே படம் பண்ணனும்னு தோணுது என்றார். உண்மையிலேயே தமிழ்நாட்டுல படம் பண்ணவே பிடிக்கல என்று தெரிவித்தார்.
உண்மையில் இங்கே திறமையான கலைஞர்களுக்குப் பஞ்சமில்லை. சூர்யா சாருக்குள்ள இருக்கும் நடிகனை முழுசா வெளிய கொண்டு வரணும். கமல் சார் நினைச்சா இந்த தேசத்தையே கட்டிப்போட முடியும். அது மாதிரி சினிமா செய்யணும். அஜித்,விக்ரம், தனுஷ் என்று அவர்களோட திறமைக்கு கதை பண்ண வேண்டும்.
ஆனால் இங்கு கதைக்கே வேலை இல்லை. அப்புறம் என்ன படம் பண்றது பத்தி பேசுறது என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in