சட்டம் அனைவருக்கும் சமம் என்று நிரூபித்த பூனே போலீசார்…!
போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக கடந்த இரண்டு வாரங்களில் 392 காவல்துறை வாகனங்கள், 160 அரசு வாகனங்கள் மற்றும் 35 ஆயுதப்படை வாகனங்களுக்கு புனே போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
முறையாக பார்க்கிங் செய்யமால் இருந்ததற்கும், தலைக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்கியதற்கும், தவறான திசையில் வாகனத்தை ஒட்டி வந்த அரசு மற்றும் காவல்துறை வாகனங்களை புனே நகர பொதுமக்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளைங்களில் பதிவிட்டதை தொடர்ந்து இந்த துரித நடவடிக்கை புனே நகர போக்குவரத்து போலீசாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சட்டம் என்பது அனைவர்க்கும் ஒன்றுதான் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.