1. Home
  2. தமிழ்நாடு

சச்சின் மகள் சாரா டெண்டுல்கருக்கு புதிய பொறுப்பு..!

1

இந்திய கிரிக்கெட் அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் என்று போற்றப்படுவர் சச்சின் டெண்டுல்கர். இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றி சச்சின் டெண்டுல்கர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.

சச்சின் டெண்டுல்கர் – அஞ்சலி தம்பதியருக்கு சாரா டெண்டுல்கர் என்ற மகளும் அர்ஜுன் டெண்டுல்கர் மகனும் உள்ளனர். அர்ஜுன் டெண்டுல்கர் தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் களமிறங்கி மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.மகளான சாரா டெண்டுல்கர் லண்டனில் முதுகலைப் பட்டம் முடித்துள்ளார். 

சச்சின் மனைவி அஞ்சலி டெண்டுல்கர் குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வரும் நிலையில், அவருடைய மகளான சாராவும் மருத்துவத்தை பின் தொடர்ந்து லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவம் மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர், அவருடைய மகள் சாரா சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர், “எனது மகள் சாரா டெண்டுல்கர் ’சச்சின் டெண்டுல்கர் அறக்கட்டளையின்’ இயக்குநராக சேர்ந்துள்ளார் என்பதை பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவ மற்றும் பொது சுகாதார நியூட்ரிஷன் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். விளையாட்டு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றின் மூலம் இந்தியாவை மேம்படுத்தும் பயணத்தை அவர் தொடங்குகிறார்" என்று சச்சின் X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like