கோலாகலமாக நடைபெறும் பூரம் திருவிழா!!
கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக பிரசித்தி பெற்ற பூரம் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கோவிலின் முன் பகுதயில், ஓயாமல் ஒலிக்கும் பஞ்சவாத்திய மேளத்தில் தொடங்கி சுமார் 6 மணி நேரம் தொடர்ந்து வெடிக்கும் வாண வேடிக்கை நிகழ்ச்சியுடன் நாளைய காலை நிகழ்ச்சி முடிவடைகிறது.
2 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து துவங்கி திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.
சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில் பஞ்சவாத்தியம் தொடர்ந்து ஒலிக்கும். நிகழ்ச்சியின் முடிவில் 6 மணி நேரத்திற்கு மேலாக வாண வேடிக்கை நிகழ்த்தப்படும்.
குட மாற்றம் தொடர்ந்து பிரமாண்ட வான வேடிக்கை நடைபெறும். சுமார் 20 லட்சம் மக்கள் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
newstm.in