1. Home
  2. தமிழ்நாடு

கோடிக்கணக்கான பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்வீட்டரின் புதிய அப்டேட்..!!

கோடிக்கணக்கான பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்வீட்டரின் புதிய அப்டேட்..!!

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக வலைத்தளங்களில் ஒன்று ட்விட்டர். ஒரு நாட்டின் பிரதமர் முதல் சாமானிய மக்கள் வரை அனைவரும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். அனைத்து உலக பிரபலங்களும் முக்கிய அறிவிப்புகளை ட்விட்டர் மூலமே வெளியிடுகின்றனர்.

பல சமூக வலைதளங்கள் இருந்தாலும் 140 எழுத்துகளில் சொல்ல வேண்டிய செய்தியை சொல்ல வேண்டும் என்பதே ட்விட்டரின் சிறப்பம்சமாக இருக்கிறது. அதனால் சர்வதேச அளவில் பல ஆக்டிவ் பயனர்கள் இருக்கும் சமூக வலைதளமாக ட்விட்டர் இருக்கிறது. ட்விட்டர் தலத்தில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன.

கோடிக்கணக்கான பயனர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ட்வீட்டரின் புதிய அப்டேட்..!!

இந்த நிலையில் நேற்று தனது பயனர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் அனுப்பியுள்ள குறுஞ்செய்தி தான் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ட்விட்டரில் நேற்று ஸ்கிரீன்ஷாட் எடுக்க முயன்ற சில பயனர்களுக்கு அந்நிறுவனம் அனுப்பியுள்ள "பாப்-அப்" குறுஞ்செய்தியில், இனி ஸ்கிரீன்ஷாட்களுக்கு பதிலாக குறிப்பிட்ட ட்விட்டின் லிங்கை பகிருங்கள் அல்லது அந்த ட்விட்டை ஷேர் செய்யுங்கள் என தெரிவித்துள்ளது.

வரும்காலங்களில் ட்விட்டரில் ஸ்கிரீன்ஷாட் வசதியை நீக்கிய பின் பயனர்கள் இடையூறுகளை சந்திக்காமல் இருக்க அந்நிறுவனம் தற்போதே பயனர்களை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "பாப்-அப்" குறுஞ்செய்தி குறித்த நிறுவனத்தின் வித்தியாசமான நடவடிக்கையால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் 'ஸ்கிரீன்ஷாட் வசதி நீக்கம்' குறித்து ட்விட்டர் அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

Trending News

Latest News

You May Like