கொள்ளையடித்தவர்களை அரவணைத்து செல்கிறார் பிரதமர் மோடி..!!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கட்சி தலைவர்களை சிறையில் அடைத்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளையடித்தவர்களை அரவணைத்து செல்கிறார் பிரதமர் மோடி என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நல்ல கல்வி மற்றும் நல்ல சுகாதார வசதிகளை வழங்குபவர்களை சிறைச்சாலையில் அடைக்கும் பிரதமர் மோடி, நாட்டை கொள்ளையடிப்பவர்களை ஆதரிப்பது தான் கவலை அளிக்கிறது.
ஹோலி கொண்டாடிய பின் தயவுசெய்து நாட்டிற்காக பிரார்த்தனை செய்ய நேரம் ஒதுக்குங்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தினார்.