கொலை வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏவின் தம்பி கைது!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சின்னராசு என்பவர் சமயபுரம் கோயில் பகுதியில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், மண்ணச்சநல்லூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பரமேஸ்வரி முருகனின் தம்பி புல்லட் ராஜா கொலை செய்தது தெரியவந்தது. கடந்த ஜனவரி மாதம் லாரி உரிமையாளரை கொலை செய்த வழக்கில் புல்லட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புல்லட் ராஜாவை பார்க்க அவரது மனைவி கிருஷ்ணவேணி அடிக்கடி ஆட்டோவில் சென்று வந்துள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவுக்கும் கிருஷ்ணவேணிக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
அண்மையில் ஜாமினில் வெளியே வந்த புல்லட் ராஜா ஆட்டோ ஓட்டுநர் சின்னராசுவும் தனது மனைவி கிருஷ்ணவேணிக்கும் இடையேயான கள்ளக்காதலை அறிந்து கண்டித்துள்ளார். ராஜாவின் கண்டிப்பை இருவரும் பொருட்படுத்தவில்லை.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சின்னராசு தனது ஆட்டோவில் கிருஷ்ணவேணியுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது இரண்டு பேர் சின்னராசு கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், ராஜா (எ) புல்லட் ராஜா (41), அவரது நண்பா்களான சமயபுரம் ஷேக் அப்துல்லா (42), அப்துல் கனி (26) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in