1. Home
  2. தமிழ்நாடு

கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர்!!

கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர்!!

டெல்லியில் பாஜக அலுவலகம் முன்பு அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

பாஜக பிரமுகர் தஜிந்திர பால் சிங் பாகா பாஜக அலுவலகம் முன்பு, அரவிந்த் கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர் ஒன்றை வைத்துள்ளார்.

அந்த பேனரில், 'தான் வாழும் நகரினை எரிவாயு கிடங்காக மாற்றி வைத்திருக்கும் உலகின் இரண்டாவது தலைவர் கெஜ்ரிவால். முதலாவது நபர் ஹிட்லர். பொது நலன் கருதி தஜேந்திர பால் சிங் பாகா என்று தனது பெயரையும் குறிப்பிட்டுள்ளார்.


கெஜ்ரிவாலை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேனர்!!

டெல்லியில் காற்று மாசினால் மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கும் வேளையில், அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் சுற்றுப்பயணம் சென்று கொண்டிருக்கிறார் என்று தஜிந்தர் பால் சிங் பாகா விமர்சித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like