1. Home
  2. தமிழ்நாடு

கூலிப்படையை ஏவி பழைய காதலனை கொல்ல முயற்சித்த காதலி!!

கூலிப்படையை ஏவி பழைய காதலனை கொல்ல முயற்சித்த காதலி!!

கன்னியாகுமரி மாவட்டம் மாத்தார் பகுதியை சேர்ந்த பிரவின் என்பவருக்கு அணக்கரை பகுதியை சேர்ந்த 19 வயது ஜெஸ்லின் என்ற கல்லூரி மாணவியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்தனர். இந்த நிலையில் ஜெஸ்லின் கடந்த ஒரு மாதமாக பிரவின் உடனான தொடர்பை மெல்ல மெல்ல விலக்கி கொள்ள தொடங்கினார்.

இதனால் சந்தேகமடைந்த பிரவின் அவரை கண்காணிக்க தொடங்கியுள்ளார். ஜெஸ்லின் தனது பக்கத்து வீட்டை சேர்ந்த டிரைவர் ஜெனித் என்பவருடன் தொடர்பில் இருப்பதை அறிந்த பிரவின் ஜெஸ்லினை கண்டித்துள்ளார்.


கூலிப்படையை ஏவி பழைய காதலனை கொல்ல முயற்சித்த காதலி!!


ஆத்திரமடைந்த ஜெஸ்லின் தற்போது ஜெனிதை காதலித்து வருவதாகவும் அவரைதான் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பிரவினிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பிரவின் தான் கொடுத்த பரிசு பொருட்களை திரும்ப கேட்டுள்ளார்.

பரிசு பொருட்களை திரும்ப தருவதாக கூறி பிரவினை வேர்கிளம்பி பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். பிரவின் பைக்கில் வந்து கொண்டிருந்த போது, அப்பெண் தனது காதலனுடன் பிரவினை பின் தொடர்ந்து வந்துள்ளார்.


கூலிப்படையை ஏவி பழைய காதலனை கொல்ல முயற்சித்த காதலி!!


ஏற்கனவே திட்டமிட்டப்படி எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த கூலிப்படையை சேர்ந்த இரண்டு பேர் பிரவினின் இருசக்கர வாகனத்தை மோதி கீழே தள்ளி விட்டு சரமாரியாக தாக்க தொடங்கினர்.

ஜெஸ்லின் புதிய காதலனுடன் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நிலையில், அங்கு திரண்ட பொதுமக்கள் காயமடைந்த பிரவினை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரில் ஜெஸ்லின், ஜெனித் மற்றும் தாக்குதல் நடத்திய நபர்கள் 2 பேர் என நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக இருக்கும் நால்வரை போலீசார் தேடிவருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like