கூட்டுறவுத்துறை செயல்பாடு திருப்தியில்லை: தமிழக நிதியமைச்சர் 'பகீர்' பேச்சு..!
கூட்டுறவுத் துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் எனக்கு திருப்தியில்லை என்று, மதுரையில் நடந்த அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
மதுரையில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் பேசிய பழனிவேல் தியாகராஜன், "கூட்டுறவு சங்கங்கள் முழுமையான கணிணி மயமாக்கப்படாமல் இருப்பதால் பல பிழைகள் நடைபெறுகின்றன. நடமாடும் ரேஷன் கடைகள் உரிய நேரத்திற்கு செல்வதில்லை. கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் நிதியமைச்சராக எனக்கு திருப்தி இல்லை" என்று கூறினார்.
நிதியமைச்சராக உள்ள பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை வளர்ச்சியின் செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை எனக் கூறியது அரசியல் விமர்ச்கர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.