1. Home
  2. தமிழ்நாடு

கூகிள் மேப் பொய் சொல்லாது என யாரு சொன்னா ?

கூகிள் மேப் பொய் சொல்லாது என யாரு சொன்னா ?

கேரளா, மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள போர்டு கொச்சி பகுதியை சேர்ந்த 8 நண்பர்கள் ஏதாவது நீர்விழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அப்போது அவர்கள் நீண்ட நெடிய கலந்துரையாடலுக்கு பின்னர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா அருகே மலையிஞ்சி பகுதியில் வனத்தினுள் உள்ள கிழார் குன்று நீர்வீழ்ச்சிக்கு செல்வது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு மலையிஞ்சி பகுதி வரை வாகனத்தில் அனைவரும் சென்றனர். இதன் பின்னர் வனப்பகுதியில் நடந்து செல்ல வேண்டும் என்பதால் வாகனத்தில் இருந்து இறங்கி அவர்கள் கூகுள் மேப் உதவியுடன் நீர்வீழ்ச்சியை சென்று அடையலாம் என எண்ணிய அவர்கள் கூகுள் மேப் உதவியே நாடினர்.

இவ்வாறிருக்க, கூகுள் மேப் உதவியுடன் வனப்பகுதியில் சென்ற அவர்கள் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை என கூகுள் மேப் காட்டிய பாதையில் இவர்கள் வனப்பகுதியில் சென்ற நிலையில் அப்போதுதான் அவர்களுக்கு தெரிந்தது நீர்வீழ்ச்சி எதிர் புறம் உள்ளது என்றும் தாங்கள் கூகுள் மேப்பை நம்பி வேறு ஒரு பகுதியில் இருப்பதை உணர்ந்தனர். அப்போது தாங்கள் இருக்கும் பகுதி அடர்ந்த வனப்பகுதி என்றும் யானைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அருகில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்த நிலையில் நண்பர்கள் அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

சரியாக வழிகாட்டும் என கூகுள் மேப்பை நம்பி ஏமாற்றமடைந்த நண்பர்கள் பெரும் அதிருப்தியில் இருந்தனர்.


Trending News

Latest News

You May Like