குவியும் பாராட்டுக்கள்..!! புதுச்சேரியில் கர்ப்பிணி பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவை தொடக்கம்..!!
புதுச்சேரியில் தனியார் அறக்கட்டளை சார்பில், கர்ப்பிணிப் பெண்களுக்கான இலவச ஆட்டோ சேவையை தொடங்கபட்டுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி ஆளுநர் மாளிகை எதிரே நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் தமிழிசை, கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புதுச்சேரியில் உள்ள கர்ப்பிணி பெண்கள் யார் வேண்டுமானாலும் புதுச்சேரியில் உள்ள ஆட்டோவை தொடர்பு கொண்டால் இலவசமாக பயணம் செய்யலாம். அதற்கான கட்டணத்தை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தனியார் அறக்கட்டளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.