குலதெய்வ கோவிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு!!
நடிகை நயன்தாரா, அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள குலதெய்வ கோவிலில் வழிபாடு செய்தனர்.
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து கடந்த ஆண்டு பிரமாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன.
குழந்தைகளின் முகம் காட்டாமல் குடும்ப புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் உள்ள விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலில் இருவரும் வழிபாடு செய்தனர்.
தஞ்சை மாவட்டம் வழுத்தூரில் ஸ்ரீகாஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் தான் நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவில் என சொல்லப்படுகிறது. திருமணத்திற்கு முன் இருவரும் இந்த கோவிலுக்கு வந்த நிலையில், தற்போது மீண்டும் இன்று கோவிலுக்கு வந்தனர்.
நயன் - விக்கி வருகையை ஓட்டி காமாட்சி அம்மனுக்கு பால். தயிர் சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டன. நயன் - விக்கி வருகையை அறிந்த ஊர் மக்களும், ரசிகர்களும் கோவில் வளாகத்தில் கூடியதால் அங்கு பரபரப்பாக ஏற்பட்டது.
newstm.in