1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்.. தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!

குட் நியூஸ்.. தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்..!

பிப்ரவரி மாதத்தில் நடக்கும் வணிகவியல் தட்டச்சு தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜனவரி மாதம் 20-ம் தேதி கடைசி நாள் என முன்பு கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில், தனித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை வந்துள்ளது.


அதன்படி, இணையத்தில் பதிவுசெய்த தனித் தேர்வர்கள் வருகிற 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் செய்து தங்களுக்கான தேர்வு அணிகளை தேர்வு செய்துகொள்ளலாம்.

மேலும் விவரங்களை https://dte.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம் என தமிழக தொழில் நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like