1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் சென்னை மெரினாவில் ராேப் கார் சேவை..!

1

'சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை சென்னை பெருநகர மாநகராட்சி எடுத்து வருகிறது. மக்களை கவரும் வகையில் பூங்காங்கள், சுற்றுலா  தலங்களை அமைப்பதில் சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக செம்மொழி பூங்கா மற்றும் கலைஞர் நூற்றாண்டு பூங்கா ஆகியவைகளை குறிப்பிட்டு சொல்லலாம். 

சென்னையில் அமைந்துள்ள உலகிலேயே நீளமான கடற்கரை என பார்க்கப்படும் சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்த பல்வேறு திட்டங்களை சென்னை பெருநகர மாநகராட்சி எடுத்து வருகிறது.

இந்நிலையில்,மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் இயற்றை எழிலை கண்டு களிக்கும் வகையிலும் இந்த ரோப் கார் சேவை கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.சென்னை மெரினாவில் ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரி, சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வருகிற 17-ந் தேதிக்குள் டெண்டருக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட விரிவான அறிக்கை, மதிப்பாய்வு உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like