குட் நியூஸ்..!! இன்று முதல் சென்னை மாநகர பேருந்துகளில் ஒலி அறிவிப்பு திட்டம் அமல்..!!
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இதன் கீழ் சென்னை, விரைவுப் போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 20 ஆயிரம் பேருந்துகள் இயங்கி வருகின்றனர்.
பேருந்துகளில் பயணம் செய்யும் மக்களின் வசதிக்காக பல்வேறு அம்சங்களும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் இன்று (நவ. 26) தொடங்கப்பட்டது
மேலும் பேருந்துகளில் அடுத்து வர இருக்கும் நிறுத்தம் குறித்து தமிழ், ஆங்கில மொழிகளில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்படும். அது மட்டுமில்லாமல் 300 மீட்டருக்கு முன்னதாகவே பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்படுவதால் பயணிகள் தங்களுடைய நிறுத்தத்தை சரியாக கண்டறிந்து இறங்கலாம். மேலும் இந்த வசதி மூலம் பார்வையற்றவர்களுக்கும், எழுத படிக்க தெரியாதவர்களுக்கும், சென்னைக்கு புதிதாக வருபவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
இதற்காக பேருந்தின் முன், பின், நடுப்பகுதிகளில் பக்கவாட்டுக்கு ஒன்று என, மொத்தம் 6 ஒலி பெருக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடுத்து வரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பு 300 மீட்டர் முன்பாக பேருந்து நிறுத்ததின் பெயர் குறித்த தகவல் ஒலிபரப்பப்படும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் சிவசங்கர், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேருந்தில் பயணித்தனர்.